07 August 2014

Bharat Ratna Award



















ABOUT BHARAT RATNA  AWARD
                                                                                                                                                                               
                  
                      Bharat Ratna Award
                  
                     Bharat Ratna Award
                  (Reverse Side)
















பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலைஅறிவியல்இலக்கியம்மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின்முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம்எனப் பொருள் தரும்.

இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

விருது பயன்பாட்டு விதிகள்

  • விதி 18 (1)-ன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
  • அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

விருது பெற்றோர் பட்டியல்


பெயர்ஆண்டு
முனைவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1888-1975)1954
சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி (1878-1972)1954
முனைவர். சி. வி. ராமன் (1888-1970)1954
முனைவர். பக்வான் தாஸ் (1869-1958)1955
முனைவர். மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (1861-1962)1955
ஜவகர்லால் நேரு (1889 -1964)1955
கோவிந்த் வல்லப் பந்த் (1887-1961)1957
முனைவர். தோண்டோ கேசவ் கார்வே (1858-1962)1958
முனைவர். பிதான் சந்திர ராய் (1882-1962)1961
புருசோத்தம் தாசு தாண்டன் (1882-1962)1961
முனைவர். ராஜேந்திர பிரசாத் (1884-1963)1962
முனைவர். சாகிர் ஹுசைன்(1897-1969)1963
முனைவர். பாண்டுரங்க் வாமன் கானே (1880-1972)1963
லால் பகதூர் சாஸ்திரி (மறைவுக்கு பின்) (1904-1966)1966
இந்திரா காந்தி (1917-1984)1971
வி.வி. கிரி (1894-1980)1975
கே. காமராஜ் (மறைவுக்கு பின்) (1903-1975)1976
அக்னசு தெரேசா போயாக்சு (அன்னை தெரேசா) (1910-1997)1980
ஆச்சார்ய வினோபா பாவே (மறைவுக்கு பின்) (1895-1982)1983
கான் அப்துல் கப்பார் கான் (1890-1988)1987
எம். ஜி. இராமச்சந்திரன் (மறைவுக்கு பின்) (1917-1987)1988
முனைவர் பீம் ராவ் ராம்ஜி அம்பேத்கர் (மறைவுக்கு பின்) (1891-1956)1990
நெல்சன் மண்டேலா (b 1918)1990
ராஜிவ் காந்தி (மறைவுக்கு பின்) (1944-1991)1991
சர்தார் வல்லபாய் படேல் (மறைவுக்கு பின்) (1875-1950)1991
மொரார்ஜி தேசாய் (1896-1995)1991
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (மறைவுக்கு பின்) (1888-1958)1992
ஜே. ஆர். டி. டாடா (1904-1993)1992
சத்யஜித் ராய் (1922-1992)1992
சுபாஷ் சந்திர போஸ் (1897-1945) (பின்னர் திரும்ப பெறப்பட்டது)1992
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் (b 1931)1997
குல்சாரிலால் நந்தா (1898-1998)1997
அருணா ஆசஃப் அலி (மறைவுக்கு பின்) (1908-1996)1997
எம். எஸ். சுப்புலட்சுமி (1916-2004)1998
சி. சுப்ரமணியம் (1910-2000)1998
ஜெயபிரகாஷ் நாராயண் (மறைவுக்கு பின்) (1902-1979)1999
ரவி சங்கர் (b 1920)1999
அமர்த்தியா சென் (b 1933)1999
கோபிநாத் போர்டோலாய் (b 1927)1999
லதா மங்கேஷ்கர் (பி 1929)2001
பிஸ்மில்லா கான் (1916 - 2006)2001
பீம்சென் ஜோஷி (பி 1922)2008
சி.என்.ஆர்.ராவ் (பி 1934)2013
சச்சின் டெண்டுல்கர் (பி 1973)2013




No comments:

Post a Comment